மழைநீர் வடிகாலில் அடைப்பு

Update: 2025-11-16 10:51 GMT

கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் காமாட்சியம்மன் கோவில் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மழைநீர் வடிகாலில் செல்லாமல் கோவிலுக்கு அருகில் தேங்குகிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் கடும் சிரமப்படுகிறார்கள். தேங்கும் மழைநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகமாகுவதோடு கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த மழைநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்