சேதமடைந்த கட்டண கழிப்பறை

Update: 2023-05-31 11:13 GMT
தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லும் ஒன்று. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் ஒகேனக்கல் மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கதவுகள் உடைந்தும், போதிய தண்ணீர் வசதியின்றி, ஈக்கள் மொய்க்கும் தளமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மூக்கை பிடித்துகொண்டுநிலை ஏற்பட்டு ஏற்பட்டு உள்ளது. இதனை சீரமைத்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்