தஞ்சையை அடுத்த காட்டூர் கீழத்தெருவில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வடிகால் மூடப்படாமல் திறந்த நிலையில் இருக்கிறது. மேலும், கழிவுநீர் வடிந்தோடாமல் வடிகாலுக்குள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த கழிவுநீர் வடிகாலால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தர வேண்டும்.