பவானி அருகே ஒரிச்சேரி ஊராட்சி இந்திரா நகரில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் ரோடு, தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம் உள்ளது. துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே இந்திரா நகரில் சாக்கடை வடிகால் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?