தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி செக்கடித்தெருவில் நகராட்சி கழிவறை உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கு சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.