சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-07-21 17:00 GMT

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலின் அருகே பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனசேகர், சேலம்.

மேலும் செய்திகள்