சுகாதார சீர்கேடு

Update: 2023-04-02 14:12 GMT

கோபிசெட்டிபாளையம் அருகே கலிங்கியம் ஊராட்சி பகுதியில் உள்ள ஜே.கே.கே. கோல்டன் சிட்டி பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்க ஊராட்சி நிர்வாகத்தால் 1½ மாதத்துக்கு முன்பு சுமார் 60 அடி நீளத்துக்கு தோண்டப்பட்டது. ஆனால் வடிகால் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. கொசு உற்பத்தியாகி வருகிறது. உடனே சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்