நாமக்கல் நகரின் மைய பகுதியில் கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த தண்ணீருடன் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் நிறம் மாறி குளத்தில் துர்நாற்றம் வீசுவதுடன் நீரும் மாசடைகிறது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.