திண்டுக்கல் வேதாத்திரி நகர் ஏ.ஜி.திருச்சபை பின்புறம் உள்ள கழிவுநீர் செல்லும் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது, கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகிறது. இதுமட்டுமின்றி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் செல்லும் ஓடையை தூர்வாரி, அதன் கரைகளை உயர்த்தி கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.