புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை அருகே தனியாருக்கு சொந்தமான இடம் பராமரிப்பு இன்றி உள்ளது. இந்த இடம் திறந்த வெளி கழிப்பிடமாக செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் வசிப்போர், வியாபாரிகள், பஸ் பயணிகள் என அனைவரும் பாதிக்கபடுகின்றனர். நோய் பரவும் அபாயமும் உள்ளது. மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் சம்பந்தபட்ட இவ்விஷயத்தில் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.