தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகலும், பிளாஸ்டிக் கழிவுகலும் கொட்டப்படுவதால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வருகின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார செய்ய வேண்டும்.
-தங்கவேல், பாலக்கோடு, தர்மபுரி.