துர்நாற்றம் வீசும்சாக்கடை
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 12-வது வார்டு வள்ளுவர் தோட்டம் நேரு வீதி ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள சாக்கடை துர்நாற்றம் வீசுகிறது. புழுக்கள் அதிகம் காணப்படுகிறது. கொசுவும் அதிகமாக உற்பத்தியாகி கொண்டுள்ளது. சாக்கடையை தூர்வாரி கொடுக்கும்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதே இல்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.
-கருணாகரன், 15 வேலம்பாளையம்.
--8976543223