நாமக்கல்- திருச்செங்கோடு சாலையையும், பொய்யேரிக்கரை சாலையையும் இணைக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையின் ஓரமாக வாறுகால் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள நிலையில் திருச்செங்கோடு சாலையில் உள்ள தானியகிடங்கு அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவுநீரை வெளியேற்ற போதிய கால்வாய வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.