ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் பழைய காலனியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்லமுடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் சில இடங்களில் கழிவுநீ்ர் வாய்க்காலில் இருந்து வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.