சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-02-08 12:32 GMT

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.38-வது வார்டு கணபதி நகர், வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது. அவற்றை சரியாக அமைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதன் காரணமாக பாதாள சாக்கடையில் இருந்து, தற்போது கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. அதனால், எங்கள் பகுதியில் துார்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் இதை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்