கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய்

Update: 2023-02-01 17:38 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து பள்ளிக்கூடத்தெரு, நடுத்தெரு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் செல்வதற்கு அமைக்கப்பட்ட குழாய் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்வதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்