தஞ்சாவூர் பூக்கார தெருவிலிருந்து விளார் சாலை முழுவதும் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகளை தீவைத்து கொளுத்தி வருகிறார்கள். இதனால் தெருவில் புகை மூட்டம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மூச்சு விடுவதில் சிரமப்படுகிறார்கள். மேலும் காற்று மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை.