கோவில்பட்டி முகமதுசாலிகாபுரம் செல்லும் சாலையில் உள்ள வாறுகாலில் குப்பைக்கூளமாக உள்ளது. இதனால் வாறுகாலில் அடைப்புகள் ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று ஆழ்வார் தெருவில் உள்ள வாறுகாலிலும் அடைப்புகள் உள்ளன. எனவே வாறுகாலில் அடைப்புகளை அகற்றி தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.