கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகை கிராமத்தில் இதுவரை கழிவுநீர் கால்வாய் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி, தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.