சேலம் மாநகராட்சி 16-வது வார்டு நாராயணபிள்ளை தெருவில் இருபுறமும் சாக்கடை கால்வாய் செல்கிறது. மழை காலத்தில் மழை நீருடன், கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் செல்லும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அதேபோன்று நாராயணபிள்ளை தெருவில் சாலை புதுப்பிக்கும் பணியும் தொடங்கியது. பல நாட்கள் ஆகியும் சாலைப்பணி, சாக்கடை கால்வாய் அகலப்படுத்தும் பணி கிடப்பில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், சேலம்.