நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மூவேந்தர் நகர் ஹோலி கிராஸ் கல்லூரி சாலையில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன்புறம் உள்ள கழிவுநீர் ஓடையை முறையாக தூர்வாராததால் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜியோ மில்டன், மூவேந்தர்நகர்.