தர்மபுரி மாவட்டம் பேரூராட்சி 10-வது வார்டில் ஆனங் கிணற்றுத் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் கால்வாயில் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தி ஆவதால் குழந்தைகள், பெரியவர்கள் கொசுக்கடியால் நோய் பரவி சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தி நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.