காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வள்ளலார் நகர் அண்ணா தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் வடிகால் சீரமைக்கப்படவில்லை. கழிவுநீர் தெருவில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியின் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக் காலங்களில் சேரும் சகதியுமாக இருக்கிறது. எனவே கழிவுநீர் வடிகாலையும், சாலையையும் சீரமைத்து தர வேண்டுகிறொம்.