ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக ரோஜா பூங்கா பகுதிகளில் அடிக்கடி இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.