மதுரை மாவட்டம் ஆனையூர் மாநகராட்சி 3-வது வார்டில் உள்ள கருப்பசாமி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாராமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் மழைக்காலங்களில் சாக்கடை நீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?