அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கொக்கனேரியில் ஏரி தூர்வாரும் பணி மற்றும் பூங்கா அமைக்கும் பணிக்காக ஏரி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இந்த தண்ணீரானது ராஜக்கொல்லைத் தெரு, ஜூப்ளி ரோடு, தேவாங்க நடுத்தெரு, கடைவீதி உள்ளிட்ட சாக்கடைகள் வழியாக வெளியேறி வருகிறது. இதில் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே தனியார் சைக்கிள் கடை முன்பாக கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக அங்கிருந்து வெளியேறி சாலை முழுவதும் ஏரிநீர் மழை பெய்து வெள்ளம் ஓடுவது போல் ரோட்டில் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாக்கடை கலந்த ஏரிநீரில் மேலும் கழிவுநீருடன் கலந்து வெளியேறி வரும் தண்ணீரில் நடந்து சென்றால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.