ஈரோடு சங்குநகரில் சூரம்பட்டிக்கு செல்லும் மெயின்ரோட்டின் சாலையோரமாக சாக்கடை கால்வாய் செல்கிறது. அங்கு அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.