மூடி இல்லாத கழிவுநீர் தொட்டி

Update: 2022-11-03 05:41 GMT

சென்னை அயனாவரம் பெரியார் சாலை குடியிருப்பு பகுதியில் இருக்கும் சி. பிளாக் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டி மூடி இல்லாமல் இருக்கிறது. இந்த நிலை கடந்த 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதனால் குப்பைகள் விழுந்து, கழிவுநீர் தொட்டியில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பதுடன், துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்