கொசுக்களால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-30 12:10 GMT

கொசுக்களால் நோய் பரவும் அபாயம்

மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வந்தது. இதனால் மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்திருப்பதால் இப்பகுதி கிணறுகள் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வேலையில் மூலனூர் கடைவீதியில் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலை உள்ளது. அதனால் மூலனூர் கடைவீதி பகுதிகள் மற்றும் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

குணா,மூலனூர்.

99652 66777

மேலும் செய்திகள்