மதுரை 22 வது வார்டு விளாங்குடி அருகே சூசை நகர் 2 வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மழை பெய்தால் கழிவுநீரானது வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியின் சுகாதாரம் கெடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.