பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் சாக்கடை கால்வாய் உள்ளது. ஆனால் அதன் மீது மேல் மூடி இல்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கால் தவறி கால்வாய்க்குள் விழுந்து வருகின்றனர். மேலும் இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த கால்வாயில் விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயில் மேல் மூடி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.