தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-08-31 14:36 GMT

பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் சுமார் 16 அடி நீளம் கழிவுநீர் கால்வாய் வேலை நடைபெறாமல் இப்பணியானது பாதியில் நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் மழை பெய்தால் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்