பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் திருமாந்துறை கிராமத்தில் மாதா கோவிலின் முன்புறம் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் சிதிலமடைந்து பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆறு மாதங்களாகியும் இன்னும் கழிவுநீர் வாய்க்கால் சரிசெய்யப்படாததால் இப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வருபவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.