சென்னை கொருக்குப்பேட்டை கண்ணன் தெரு, ரெயில்வே கேட் அருகே மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி மாதக்கணக்கில் இழுவையில் உள்ளது. இதனால் கால்வாய் பள்ளம் போல் காட்சியளிக்கிறது. அருகில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த பாதையை விரைந்து சரி செய்து தர வேண்டும்.