கழிவுநீர் வாய்க்கால் சரிசெய்யப்படுமா?

Update: 2022-07-15 18:03 GMT

அரியலூரில் கைலாசநாதர் கோவில் தெருவும், பொன்னுசாமி அரண்மனை தெருவும் சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் செல்லும் பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கடந்த ஆண்டு அதிக உயரமாக கட்டப்பட்டது. சிறிய அளவில் தடுப்பு சுவர் கட்ட படாமல் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி அதில் விழுந்து விடுகின்றனர். மேலும் தெருக்களில் சேரும் குப்பைகள் காற்றில் அடித்து வரப்பட்டு கழிவுநீர் வாய்க்காலில் சேர்ந்து விடுகிறது. இதனால் அந்த இடத்தில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நேய்பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்