சேலம் மாவட்டம் போடிநாய்க்கன்பட்டியிலிருந்து முல்லை நகருக்கு இடையே காளியம்மன் கோவில் உள்ளது. அந்த வழியில் சாக்கடை கால்வாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் நலன்கருதி அதிகாரிகள் கால்வாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவின், ஆண்டிப்பட்டி, சேலம்.