இருளப்பபுரம் சிவன்கோவில் தெரு தெற்குச்சாலை உள்ளது. இந்த சாலையில் ஒரு வீட்டின் முன்பு அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஓடை முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ராஜலிங்கம்,இருளப்பபுரம்.