கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், குமாரமங்கலம் கிராமம் குமாரமங்கலம் காளி அம்மன் கோவில் தெருவில் உள்ள சாக்கடை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.