மதுரை புட்டு சொக்கநாதர் கோவில் அருகில் புட்டுத்தோப்பு மைதானம் பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.