தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-09-28 11:18 GMT
தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வி.பி.சிங் தெரு பகுதியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் செடி, கொடிகள் அடர்ந்து முளைத்து புதர் போல் ஆக்கிரமித்து இருந்தது. இதனால் கால்வாயில் கழிவுநீர்  வெளியேறாமல் தேங்கி துர்நாற்றம் வீசியது. இந்த புதர்களை அகற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்த புதர்களை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்