மயிலம் நகரில் பல இடங்களில் உள்ள கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் இருந்து அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொசுத்தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே கால்வாயை முறையாக தூர்வாரி கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.