தஞ்சை பகுதி 4-வது வார்டு திரிபுரசுந்தரி நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், துர்நாற்றம் காரணமாக அந்த பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடிய படி சென்று வருகின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதானல் கொசுத்தொல்லையும் அதிகளவில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா/