காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் தனுஷா நகர் 1-வது பிரிவில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது. மேலும் சாலையோரங்களிலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் நிலையுள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. அதிகாரிகள் கள ஆய்வு செய்து இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்றவும், பாதாள சாக்கடை அமைத்து இது போன்று கழிவுநீர் தேங்காதவாறும் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.