போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரத்தில், தேவாரம் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள் கிடக்கிறது. அதேபோல் கால்வாய் தூர்வாரப்படாததால் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் முறையாக செல்ல வழியின்றி சாலையில் தேங்கும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.