தேனியை அடுத்த முத்துதேவன்பட்டி சர்ச் தெருவில் சாக்கடை கால்வாய் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே கால்வாயில் தேங்கி நின்ற கழிவுநீர் முறையாக வெளியேற்றாமல் சாலையில் திறந்துவிட்டுள்ளனர். இதனால் சாலையோரம் கழிவுநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.