சூலூர் ராமசாமி அய்யர் வீதி, கண்டய்யர் வீதி, குப்பா நாயக்கர் வீதிகளில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்தப்பணிகள் கிடப்பில் கிடக்கிறது. இதனால் சாக்கடை கழிவுநீர் மேற்கொண்டு செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்குவதோடு, கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?