நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வழியாக 85.ஆர்.குமாரபாளையம் வருகிறது. அதனால் அங்கு உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிணறுகளில் சாக்கடை நீர் புகுந்து தண்ணீர் மாசுபடுகிறது. இது சம்பந்தமாக மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கழிவுநீரை வேறு பகுதி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.