பெங்களூரு புரூட்டன் சாலையில் கழிவுநீர் வடிகால் உள்ளது. அதன் மூடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் கழிவுநீர் நிரம்பி, சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த வடிகால் மூடியை சரி செய்து கொடுக்க வேண்டும்.