பெங்களூரு வேர்சோவா லே-அவுட் முதலாவது கிராஸ் பகுதியில் சாலையோர கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் போடப்பட்டு இருந்த சிமெண்டு சிலாப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. பல நாட்கள் ஆகியும் அந்த சிலாப்புகள் மீண்டும் போடப்படவில்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுநீர் வடிகாலில் சிலாப்புகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.