கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் நஞ்சகவுண்டம்பாளையம் ரோடு பிரிவு வருகிறது. அந்த இடத்தில் வடிகால் இல்லாத காரணத்தினால் சாக்கடை கழிவுநீருடன் மழை நீர் கலந்து குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும்போது நடந்துபோவோர் மீது கழிவுநீர் தெறிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து சாக்கடை வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.